தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

தமிழ் புத்தாண்டு ...

தன் மானத் தமிழனின்
தமிழ் புத்தாண்டு....

ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த
வீரத் தமிழனுக்கு
தமிழ் புத்தாண்டு ....

ஒரே ஒரு போராட்டத்தில்
உலகை திரும்ப வைத்த
உணர்வுள்ள தமிழனுக்கு
தமிழ் புத்தாண்டு...

விவசாயம் காக்க வீதியில்
நின்று போராடும்
தங்க தமிழனுக்கு
தமிழ் புத்தாண்டு ....

உலகெங்கும் வியாப்பித்திருக்கும்
எங்களது தமிழர்களுக்கு
தமிழ் புத்தாண்டு...

ஆண்டே புத்தாண்டே ...

எங்களுக்கு இனியாவது ...

மழை வரம் தரும்
மரங்களை வளர்க்கும்
மனதினை அருள்வாய்...

காசுக்கு ஓட்டை விற்கும்
மனதினை கொய்வாய்..

விவசாயத்தை காக்கும்
எண்ணத்தை கொடுப்பாய்...

மனிதனை மதிக்கும்
மகத்துவத்தை தருவாய் ....

பெண்ணியம் போற்றும்
புத்தியை போதிப்பாய்...

தாய் தந்தை காக்கும்
பொறுப்பை காப்பாய் ...

நாட்டை காக்கும்
நல் எண்ணம் நல்குவாய்...

சொந்த பந்தங்களை
சொத்தாய் சேர்ப்பாய்...

நல்ல நண்பர்களை
உறவாக தருவாய் ....

கல்வி செல்வம் வீரம்
அனைவருக்கும் அருள்வாய் ...

தீயவை அழித்து நல்லவை
போற்றுவாய் ...

என வேண்டி
என் தமிழ் புத்தாண்டே
உன்னை
கனவுகளோடும் !
கரவொலியோடும் !
கை கூப்பி வரவேற்கிறோம் ....

தமிழ் புத்தாண்டே வருக ...
அனைவர்க்கும் நல்ல வழி தருக....

அனைவருக்கும் என் இனிய
தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ....

எழுதியவர் : (13-Apr-17, 11:24 am)
சேர்த்தது : வேசரவணன்
பார்வை : 182

மேலே