வீரனின் காதல்

அஞ்சாநெஞ்சன் என்றனர் என்னை
அஞ்சனமிட்ட உன் நயனங்கள் முன் நைந்து போனேன்!

எதிரியாய் என் சிவந்த கண்முன் எவரும் நின்றதில்லை
உதிரியாய் மாறினேன் உன் பவள அதரம் கண்டபோது!

காவலனாய் வாழ்ந்து வந்தேன் இதுவரை
காதலனாய் வாழ ஆவல்கொண்டேன் கள்ளி உனை கண்டவுடனே!!!

எழுதியவர் : தமிழ் தாசன் (13-Apr-17, 11:14 am)
சேர்த்தது : பாலா
Tanglish : veeranin kaadhal
பார்வை : 80

மேலே