பிரிவாற்றாமை
தோழியே!
கண்முன் தோன்றினாய்;
கருத்தினுள் ஊன்றினாய்;
கணப்பொழுதும்
எண்ணும்வண்ணம் மாற்றினாய் - மனம்
கனமானப் பொழுதும்
ஏதும் ஆகாவண்ணம் தேற்றினாய்;
திட்டினாய்; எனை தீட்டினாய்;
தோழியாய்; கவலைக் கடலில் கவிழும்போது
தோணியாய்;
நித்தமும் எனக்காய் மனக்கதவைத் திறந்தாய்;
இன்று ஏனோ எனை மறந்தாய்?