உயிர்ப்பின் வாழ்த்துக்கள் - சி எம் ஜேசு
சாம்பலை கை நிறைத்து
புதனில் ஆரம்பிக்கும் உண்ணா நோன்பின்
உயரிய தொடக்கம் தான் உயிர்ப்பு
பிறப்பெடுத்த உயிர்களெல்லாம்
இயற்க்கைக்கு இன்பம் சேர்க்காவிடினும்
துன்பம் சேர்க்காமல் இருப்பதுவே உயிர்ப்பு
பறந்து விரிந்திருக்கும் பாரதம் தனிலே
பண்புகளை பக்குவங்களை வாழ்வுக்குரிய
பாடமாக அன்பின் நெறிமுறைகளை கற்றறிதலே உயிர்ப்பு
நீண்டதல்லாத வாழ்வுக்காக
வையமெல்லாம் வளைத்துப்போடும் ஆசை
அற்றதுதான் ஆண்டவனின் அன்பின் உயிர்ப்பு
எளிமையில் இன்புற்று ஏற்றமிகு அருள் ஊற்றாய்
இதயத்தை நல்வாழ்வுக்காக திட்டமிடலே உயிர்ப்பு
உள் வாங்கும் செய்திகள் தீமையாயினும்
வெளி கொணரும் செய்திகள் யாவும் நன்மையாகி
உலகுக்கு வாழ்வு தருதல் உண்மை உயிர்ப்பு
நன்மை செயல்களை நிறைப்போம்
இறந்தாலும் மீன்டும் உயிர்ப்போம்
உயிர்ப்பின் பெருவிழா வாழ்த்துக்கள்