உனக்காய் வாழும் மனம்


விட்டு செல்கிறேன் என்று

ஏனடி நிழலாய் தொடர்கிறாய்

என் எல்லா நிகழ்வுகளின்

அசைவுகளையும் ஏனடி கவனம் கொள்கிறாய்

வந்து போகும் மின்னல் போல்

ஏனடி நடந்து கொள்கிறாய்

உன் நட்பு பிரிந்ததில்

சரிந்து போனது என் உள்ளம் மட்டுமல்ல

என் உயிரும் தான்



எழுதியவர் : rudhran (15-Jul-11, 8:39 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 532

மேலே