விழுந்து பார்
தடம் தெரியாமல் விழுந்து பார்
தவிப்புடன் விழுந்து பார்
விழுபுண் விழ விழுந்துபார்
ஒரு வீரனாய் விழுந்துபார்
விதி என்று சொல்லி விழாமல்
ஒரு விதையாய் மண்ணில் விழுந்து பார்
விழுதலும் எழுதலுமே வாழ்க்கை
அதனால் வருத்தமின்றி விழுந்துபார்