இன்பம் காணலாம்

மனதினில் ஆசை வந்து
மயங்க வைக்கும் பொன்மாலை
காதலின் மோகம் அனைத்தும்​
வாரி வழங்கும் தேன் இரவு

தனிமையில் கண்டதும் என்னை
நாணத்தைக் கொண்டது பெண்மை
இளமையில் காதலின் தொல்லை
இன்பத்திற்கு உண்டோ ஓர் எல்லை

பஞ்சிலே மெத்தைகள் விரித்து
உனது குழலில் பூவாவேன்
கோடையில் தாகம் தீர்க்க
மகிழ்ந்து உனக்கு நீராவேன்

உன்னுடன் இருக்கும் போது
இரவும் பகலும் அறியாது
நம் கைகள் சேரும் போது எனக்கு
வேறு ஒன்றும் தெரியாது

ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (16-Apr-17, 12:42 pm)
சேர்த்தது : வேல்பாண்டியன்
Tanglish : inbam kaanalaam
பார்வை : 393

மேலே