தந்தைக்கு ஒரு இரங்கல் கவிதை

இங்கு ஆலமரம் ஒன்று
மண்ணில் புதைந்தது
விழுதுகள் எல்லாம்
கண்ணீர் சிந்துது...

எமன் ஒரு கிறுக்கன்
அவனுக்கு என்ன தெரியும்
உமனின் தாலிகயிறு
பாவி
அவனுக்கு தெரிந்ததெல்லாம்
வெறும் பாசகயிறு...

மண்ணை வெட்டி வைரம்
எடுக்கிறார்கள்
இங்கு நாங்களோ மண்ணை
வெட்டி வைரத்தை புதைத்தோம்
ஆம் தந்தை எனும் வைரத்தை...

ஜீவநதி ஒன்று
வற்றிப்போனது
எங்கள் இதயங்களில்
சோகங்கள் முற்றிப்போனது
மலை ஒன்று சாய்ந்துபோனது
எங்களின் முகத்தில்
கலை இன்று காய்ந்துபோனது...

சூரியனும் நிழல் தேடலாம்
தந்தையே நீ ஓய்விலும்
ஓய்வு தேடியதில்லை
நீ உழைத்தது போதும் என்று
ஆண்டவனே உனக்கு
நிரந்தர ஓய்வு
கொடுத்துவிட்டான் போலும்...

மானுட வாழ்க்கையில்
தந்தையெனும் பாத்திரம்
அது ஒரு அட்சயபாத்திரம்
அன்பை எடுக்க எடுக்க
குறைவதே இல்லை...

மலர்ந்த பூக்களேல்லாம்
இன்று சிரிக்க
மறுத்துவிட்டன
மூங்கிலில் காற்று மோதி
முகாரி பாடிவிட்டன
நீ இறந்துவிட்டாய் என்ற
துயர சேதி கேட்டு...

எழுதியவர் : செல்வமுத்து.M (17-Apr-17, 10:27 am)
பார்வை : 3458

மேலே