கனவுகள் பிரசவிக்கும் காட்சிகளை -- புதுக்கவிதை
கனவுகள் பிரசவிக்கும் காட்சிகளை -- புதுக்கவிதை
கனவுகள் பிரசவிக்கும் காட்சிகளைக்
கண்முன் பார்க்கின்றேன் .
மண்பாதை மீதினிலே
மாட்டுவண்டி ஒட்டுகின்றோம் .
கண்களுக்கு விருந்தாகும் .
கனவினிலும் நின்றுவிடும் .
மண்ணுலகின் மகிமையினை
மகத்துவமாய்ச் சொல்லுகின்ற
எண்ணங்கள் அழகான கிராமத்தை
எதிர்பார்க்கும் மக்களினம் .
மாட்டுவண்டி வரும் வழியில்
மாமனுமே வந்திடுவான் காதலுடன் .
காட்டுப்பாதை பல தாண்டிக்
காட்சி தருவான் என்முன்னே !!
ஊழ்வினைகள் போனதுவே .
உறவுகளும் நிலைத்திருக்க .
ஆழ்மனத்தின் நினைவுகளில்
ஆழமாகப் பதிந்துவிட்ட காட்சி .
அன்பாக அணைத்திடவே நாணத்தோடு
சிரந்தாழ்த்தி ஏற்றிடுவேன் .
சிலையாகி நின்றிடுவேன் .
வரமாக கடவுள் தந்த வாழ்வென்னும் .
தடயங்கள் கனவுகளாய்ப் பிரசவிக்கும்
காலத்தின் காட்சிகள் !!!!
முழுமதியும் பொலிவுடனே
முகவரியைத் தேடுகின்றாள் .
அழும்குழந்தை சோறுண்ண
அடையாளம் அவளன்றோ ! வழுவாது
உலகினையே வலமாக வருகின்றாள் .
மனமெல்லாம் நிறைவான
மறுப்பில்லாக் காட்சியன்றோ !!!!
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்