கசப்பு மருந்தானதோ காதல்
பார்த்தவுடன் ஈர்த்துவிட்ட
உறவா நம் உறவு?
கருத்தொருமித்த கலப்பு
அல்லவா?
பேதமின்றி புரிதலுடன்
சென்றதே!
நம் இழைதல் கண்டு
பொறாமையில்
சுட்டெரித்தே சூரியன்
விரட்ட நினைத்தாலும்
இதமாய் நிழல் கொடுத்தே
நண்பனை போல்
ஆதரித்த
மர நிழல்கள் இன்னும்
நமக்காக காத்திருக்கின்றதே!
வெட்கப்பட்டு விலகிய
தோழியாய் நொடிகள்
மணித்துளிகள் என்ற
மலர்களை
சொரிந்து விட்டு சென்றாலும்
மெய் மறந்த வேளை
கணக்கில் உள்ளதே
வார்தைகள் பஞ்சமாகும்
நம் காவியம் எழுத
பின் ஏன் இப்படியொரு
முடிவு?
விலகிவிடலாமென்று
கசப்பு மருந்தானதோ
காதல்?
#sof_sekar