வாழ்க நான் இழந்த செல்வமே
பிழையேற்கும் பண்பின்மையால்
உன்னை இழந்த நான்
தேடுகிறேன் உன் காலடி தடங்களை
நாம் சேர்ந்து நடந்த கடலோரத்தில்....
உன் தடம் கண்டபோது
என் மகிழ்ச்சி வெகு நேரம் இல்லை
மேலும் இரு தடங்களை கண்டமையால்
உன்னவர் மற்றும் உன் பிள்ளையின் தடங்கள் அவை...
நீ மகிழ்ச்சியாய் வாழ்வதை எண்ணி
உன்னை வெகுவிரைவில் மறக்கிறேன்
பிறன்மனை நோக்கா பண்பினை காப்பாற்ற...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
