காதல்

அலையா தூரம் அவள் நினைவு!
தொலையா பாரம்
என்னுள் காதல்!


சிரிப்பால் சிறைவைப்பாள்!
முறைப்பால் முகிலை
வரவழைப்பாள்!


சிந்தையிலே சந்தை போட்டு உணர்வை
கூறுபோட்டாள்!
விழியிலே வேலியிட்டு நெருங்க விடாமல்
நொறுங்கவிட்டாள்!


பூவில் ஓர் தீவாய் அவள் முகம்!
பூரிப்பில் விளைந்தது அறிமுகம்!


எனது பருவத்தை
புருவத்தால் உடைத்தாள்!
திசை எங்கும் அவள் ஈர்ப்பு விசையால் படைத்தாள்!


உயிரை பறிக்காமல் கொலை செய்யும் தந்திரகாரி!
வசியம் வைக்காமல் தன்வசம் இழுக்கும் மந்திரகாரி!


ஆசைதனை தூண்டிவிட்டு இதய மேசையினில் ஓசையிடும் புல்லாங்குழல் செல்வி!
நாடிதனில் குடியேறி துடிக்கவிட்டு படிக்கச்சொல்லி கற்ப்பிப்பாள் கல்வி!

நதியலையினில் மதியலையுதென
உலாவி கேட்டேன் வினா!
மதிகலைந்ததென
விதிகலையாதென
உருண்டு கண்டேன்
கனா!

தூக்கத்தை தூரவிட்டு ஏக்கத்தை ஏற்றிகொண்டு
ஏனிந்த பிறவியென்று ஏட்டிலே எழுதிமுடிந்தேன்!
சொல்லாமல் கொல்லும் காதல் சொல்லி மறுத்தால்
கொன்றிடுமென கருதிமுடித்தேன்!

எழுதியவர் : srk2581 (18-Apr-17, 3:10 pm)
சேர்த்தது : srk2581
Tanglish : kaadhal
பார்வை : 119

மேலே