மூன்றாவது கண் CCTV
![](https://eluthu.com/images/loading.gif)
அன்பார்ந்த எழுத்துதள கவிதைப் பிரியர்களே,
பிரதிலிபியின் மாபெரும் கவிதைப் போட்டியொன்றைக் கடந்த மாதம் நிகழ்த்தியிருக்கிறது. வரும் மே மாதம் ஐந்தாம் தேதி போட்டிக்கான முடிவு அறிவிக்கப்படும்.அதில் என்னுடைய இரண்டு கவிதைகள் இடம் பெற்றிருந்தன, இந்தச் செய்தியை முன்பே தெரிவித்திருந்தேன். ஆனால் அந்த தளத்திற்குச் சென்று பார்ப்பது சிரமமாக இருக்கிறது என்பதை ஒரு சிலர் தெரிவித்ததால். அதை இங்கே மீள்பதிவு செய்கிறேன்.
ஆங்காங்கே பெருகிவரும் குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் காவல்துறைக்கு மிகவும் உதவிகரமாகச் செயல்படும் “மூன்றாவது கண்” என்று வல்துறையினரால் செல்லமாக அழைக்கப்படுகிற CCTV (Third eye) பற்றி இதுவரை யாரும் கவிதை எழுதவில்லையென அறிகிறேன்.
======================
மூன்றாவது கண் (CCTV)
======================
பொருள்நிறைந்த இடமாய்த் தேர்ந்தெடுத்து
***பொருப்பாய்பல நாளும் வேவுபார்த்து
இருள்கவிந்த நேரத்திலே, யாருமில்லாநேரத்திலே
***இரவுநடு நிசியானதால் ஊருறங்கிஒடுங்கையிலே
திட்டமிட்டு தீங்கேதுமிழைக்காமல்
***தொட்ட கைவிரல்ரேகை பதியாமல்
வீடுபுகுந்து விலையில்லாப் பொருளெல்லாம்
***வேண்டிய அளவு சுருட்டியபிறகு
குற்றம்பல புரிந்தாலும்
***குற்றயுணர்ச்சி சிறிதேயில்லாமல்
ஒன்றுமறியாப் பிள்ளைபோல
***ஊர்கண்ணில் மண்ணைத்தூவி
பக்குவமாய நழுவி விட்டான்
***பகல் திருடனெனும் நல்லவன்
கொள்ளைபோன தகவலறிந்து...தாய்காணும்
***பிள்ளைபோல ஓடிவந்தாரொரு பரிதாபத்துகுறிவர்
வெறுப்புடனே செய்தி கேட்டறிந்து
***பொறுப்புடனே காவல்துறையில் பதிவுசெய்தார்
நீதி வருமென நெடுங்காலம் காத்திருக்கவில்லை
**சேதி வந்ததுசட்டென காவல்துறையிடமிருந்து
கள்வனைக் கண்டுவிட்டோமது
***கொள்ளைபோனதை மீட்டுவிட்டோமென
திட்டத்தோடு பிடித்துவிட்ட தீரமான
***தெவிட்டாத சம்பவத்தை தெளிவாகத்தெரிவிக்க
தொலைந்தது கிடைத்த மகிழ்ச்சியில்.
***அலைந்த தெல்லாமறந்தார் பொருளிழந்தவர்
அளவில்லாமகிழ்ச்சி பெற்றார்...விரைந்தார்
***ஆர்வத்தோடு காவல்நிலையம் நோக்கி
தொலைந்தது கிடைத்ததில்லை
***அலைந்ததுதான் மிச்சமென்று
முன் எப்போதும் சொல்வோமானல்
**பின் இப்போதோர் உபாயம் உண்டென்றறிவீர்!
நம்புவது கடினம்தான் ஆனாலும்
***நம்பிக்கை வேண்டுமப்பா காவல்துறைமீது
வழிகள்தோறும் ஒளிந்திருக்கும் மறைந்திருக்கும்
**விழிகள்மூடாது எந்நேரமும் உறங்காதிருக்கும்!
காவல்துறைக்குத் துப்பறிய தப்பாதுதவும்
***கயவர்களை கண்கொண்டு காட்டிக்கொடுக்கும்
உங்கள் கண்கள் உறங்கினாலும்
***உறங்காத கண்ணொன்று உண்டு!
ஆங்காங்கே பெருகிவரும் குற்றம்தனை
***பாங்காகக் கண்டுகொள்ளப் பணியாற்றுமிதை
மூன்றாவது கண்ணென்றும் சொல்வார்கள்
***முக்காலமுணர்ந்த முனியென்றும் சொல்லலாமே!