நெடுவாசல்

பிரதிலிபியின் மாபெரும் கவிதைப் போட்டியொன்றைக் கடந்த மாதம் நிகழ்த்தியிருக்கிறது. வரும் மே மாதம் ஐந்தாம் தேதி போட்டிக்கான முடிவு அறிவிக்கப்படும்.அதில் என்னுடைய இரண்டு கவிதைகள் இடம் பெற்றிருந்தன, இந்தச் செய்தியை முன்பே தெரிவித்திருந்தேன். ஆனால் அந்த தளத்திற்குச் சென்று பார்ப்பது சிரமமாக இருக்கிறது என்பதை ஒரு சிலர் தெரிவித்ததால். அதை இங்கே மீள்பதிவு செய்கிறேன்.

புதுகை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசல் என்கிற கிராமத்தில், எரிவாயு அமைப்பதற்கு எதிராக இன்று வரை பொதுமக்கள் போராட்டம் ஓயவில்லை.

இந்நேரத்தில், புதுதில்லியிலும் விவசாயிகள் போராட்டம் நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது, போராட்டத்தின்போது ஒரு விவசாயின் கூக்குரலாக பிரதிலிபி வெளியிட்டுள்ள கவிதை போட்டிக்கு “நெடுவாசல்” என்கிற தலைப்புடன்,கவிதை சமர்ப்பிக்க விண்ணப்பிக்கிறேன்.

நெடுவாசல்
===========


நாலாறு மாதமாய் நாட்டுல
****நல்லமழ தண்ணி இல்லீங்க
நா வறண்டுபோச்சு..நட்ட
****நாத்தெல்லாம் கருகிப்போச்சு..!


ஏரிகுளம் வத்திப்போச்சு
****ஏறுகட்டி வருசமாச்சு
ஏத்தம்போட்டு இறச்சவரும்
****நாத்துநட்டவரும் இப்பயில்லீங்க..!


குடிக்க தண்ணியில்ல
****கொக்குமீனும் இப்பயில்ல
காஞ்சமரமெல்லாம் விறகுக்கரியாச்சு
****பஞ்சம்வருமுன்னு அக்காகுருவிகத்துங்க..!


புல்லுபூண்டு இல்லாம
****பூமியெல்லாம் வறண்டுபோச்சு
மடுவுலபச்ச தண்ணியில்லாம
****மாடுகன்னு செத்துப்போச்சு..!


கரும்புபோட்ட நிலத்துல..சீமைக்
****கருவேலம் வளந்துபோச்சு..!
தண்ணிக்குவழி சொல்றோம்னுவெறும்
****எண்ணிக்கைக்கு நாலுபேருவந்தவங்க..!


கூட்டுக்குடிநீர்திட்டமினு சொன்னாங்க..அது
****ஏட்டளவுதிட்டமிதை குப்பையிலபோட்டாங்க
வந்தவங்கபோனவங்க எங்கயிப்போ..இனி
****வாக்கரிசி போடவாவது வாங்கயிப்ப..!


மீத்தேனுவேண்டாமுன்னு எத்துனமுறகத்துனாலும்
****அறிவுற்றோராருமில்ல ஆரும்கேப்பாறில்ல
எரிவாயுவந்ததுன்னா எரிபொருள்மிச்சமுன்னு..
****அருமையாச்சொல்லி ஆழக்குழிதோண்டுறாங்க..!


வாடிவாசல் திறப்பதற்கு சாதிசனம்பாக்காம
****கூடிநின்னு கோஷம்போட்டோம் தடைநீங்க
நெடுவாசல்திட்டமித நிலயாமூடயிப்ப.
****நெடுநாளாபோராடுவோம் நிரந்தரதீர்வுக்காக..!


அரசாங்கத்துக்குபோட்டமனு மடிச்சிப்போச்சு
****அதிகாரிங்கவாக்குறுதி அழுகிப்போச்சு
ஆரையும்நம்பியிப்ப பிரயோசனமில்ல
****ஆளுக்கொரு மண்வெட்டி எடுங்கப்பா..!


காலமழை பெய்யுமப்பா..அன்றுநம்
****கவலையெல்லாம் தீருமெனநம்புமப்பா
துண்ட உதறிப் போட்டுக்கிட்டு..மண்ணத்
****தோண்டப் புறப்படு அண்ணாச்சி..!


மண்வெட்டிகடப்பாற உதவியால
****மணல்சேறுதூறுவாறி போட்டோமின்னா
மழத்தூறல் பேஞ்சாக்கூடப்போதும்
****மடுகழனிஆறுஏரி நிரம்பிவழியும்..!


விவசாயி கவலயெல்லாம்
****விவரமா சொன்னாலும்..
கவர்மெண்டுக்குப் புரியுமா?
****கடவுளுந்தான் அறியுமா?

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (19-Apr-17, 6:23 pm)
பார்வை : 105

மேலே