இன்றைய மானுடம்
![](https://eluthu.com/images/loading.gif)
தனக்குப் பிடித்த துணையை
தானே தேர்வு செய்து கொள்வது பாவமோ?
மூட மனிதனிடம் புகுந்திருக்கும்
சாதி மதப்பேயினை
காதலின்றி விரட்டிடத்தான் முடியுமோ?
மீண்டும் குரங்குகளாய் மாறும் மனிதனை
எந்த விஞ்ஞானம்தான் போற்றுமோ?
மண்ணில் மனிதனைக் காணவில்லை
பின் கடவுள் எங்ஙனம் இருக்கும்?
இருந்தால் ....நாளுக்கு நாள்....
அரக்கர் இனம் எப்படி இங்கு உயரும்?