வேர் அதன் பேர்-காடன்
வேருக்கு என்ன தெரியும்
மண் மழை சுகிக்க
வெடிப்புறும் நிலம் சகிக்க
பூ மலர்த்த கனிகள் நவில
உதிர்தல் பொறுக்க
காற்றில் கிளையளாவ
வானளாவிகள் சிறகோய
சிற்றிடம் தர
மேய்பவற்றின் பசியாற்ற
துளையோடி வானளக்க
கூர்மினுங்கும் ஆயுதத்திற்கு
ஏதுவாக வளைந்து கொடுக்க
பின் மண்ணோடு மண்ணாய்
மக்கிப் போக
வேறொன்றும் தெரியும் வேருக்கு
ஒரு எளியோனின்
கவிதைக்கு வேராகவும்