குடிகாரர்களே கொஞ்சம் கேளுங்கள்

குடிகாரர்களே கொஞ்சம் கேளுங்கள்....

ஈக்களுட னுறவாடி
கொசு வுடன் கூத்தாடி போதையில் ரோட்டில் விழுந்து கிடப்பவனை சிறிது செவிசாய்...

தந்தை விளையாட வரமாட்டாரோ என ஏங்கி காத்திருக்கிறது உம் மகள் விழி
வெந்த குடலுட னிங்கு விழுந்து கிடக்கிறாய் நீ.....

நீ குடிப்ப தினால்
உன் தாயு மழுகிறாள்,
உன் மனைவியு மழுகிறாள்,
உன் மகளு மழுகிறாள்..

தாயின் கண்களில் கண்ணீர் வரவிடா மல் காப்பது தானே ஒரு மகனின் கடமை ..

மனைவியின் கண்ணீரை துடைப்பதற்கு தானே கணவனின் கரங்கள்..

மகளின் கண்களில் ஆனந்த கண்ணீரை பார்ப்பது மட்டும் தானே தந்தைக் கழகு..

தயசெய்து குடியை நிறுத்திவிடு...


குடிக்காமலிருந்தால் தலை வலிக்கிறது,கை நடுங்ககிறது என்கின்றாய்..

உன் தாயின்வலியை விட உன் தலைவலி பெரிதல்ல..

உன் மகள் காலில் ஏற்பட்ட காயத்தில் மருந்திடும் போதல்லவா உன் கை நடுங்க வேண்டும்..

போதைக்காக நடுங்குவது மடமை யல்லவா...

குடியை நிறுத்திவிடு

குடியை நிறுத்துவ தொன்றும் தியாகமில்லை ..

ஒருவேளை நீ அதை தியாகமாக எண்ணினால்

உன் மகளுக்காக செய்து விடு இந்த சிறு தியாகத்தினை யாவது..


இளைஞர்களை விழித் தெழுங்கள்
மீண்டும் இம் மண்ணிலொரு மகாபாரத போரினை நிகழ்த்தலாம்..

மது வினால் மாது வடிக்கும் கண்ணீ ரதனை துடைத்தெரிய.....

-பா.அழகு துரை

எழுதியவர் : பா.அழகு துரை (21-Apr-17, 9:12 am)
சேர்த்தது : பாஅழகுதுரை
பார்வை : 97

மேலே