சேலையில் வீடு

மாலையில் மல்லி சூடிவா
மஞ்சம் மணக்க ..
சேலை நானாய் மாறவா
உன்னை அணைக்க
நங்கை இதழ் நகை
இவன் உயிர் ஆள
பாவை எய்தும் பார்வை
வெள்ளி மின்னல் போல ...
முல்லையே உன்னை நான்
எனில் தொடுக்க
இமைகள் விலகினால்
உன் முகம் தேடுதே
இனியவள் குரலிலே
நினைவுகள் பாடுதே
முழுமதியும் மேகத்தினுள் மறைந்திருந்தால் நியாயமா
உந்தன் தோழி நாணம்
அது மெத்தை வரை ஏனம்மா ..
மௌன கவி வரிகளில்
மொழிகள் கூடாதே .
மொழியும் போது இதழினை
இதழால் மூடாதே...
மூக்கின் நுனியிலே
மூர்ச்சை ஆகிறேன்..
நெஞ்சின் பள்ளத்தில்
வீழ்ந்தும் பிழைக்கிறேன்..
முத்து பவள இதழ்களே
முக்கனி ஆனதே..
வர்ணமேனி செம்பருத்தி
தோட்டமென்று தோணுதே..
காணுமிரவு கனவிலும்
இடைவெளி தேவையா ..
யாருமில்லா கணாவிலும்
நாகரீகம் தொல்லையா