காதல் வலி

நான்
எழுதிய கவிதைகளுக்கு
உயிரில்லாமல்
போகிறது
பெண்ணே
ஒவ்வொருமுறையும்
என்னை பார்க்காத கண்கள்
என் கவிதையாவது
பார்க்குமோ
என்றும்
என்னிடம் பேசாத
வார்த்தைகள்
என் கவிதைகளுடன்
பேசுமோ
என்றும்
என் உணர்வுகளை
நீ
என் எழுத்துகள்
மூலம் புரியுமோ
என்றும்
உனக்கு
புரியும்வரை
சிந்தப்படும்
என் எழுத்துக்கள்
அல்ல
என்
ரத்தத்துளிகள்
இப்படிக்கு
உன்னில்
நான்