மக்கள் சேவையே மகேசன் சேவை”

ஐந்தொழில் புரியும் ஆண்டவனே ! " நின் திருவடியை என்றும் மறவாத மனம் வேண்டும்; எளிமையான வாழ்வு வாழவேண்டும்; பயன் கருதாப் பணியில் நெஞ்சம் பதிதல் வேண்டும் ஆலயப் பணிக்கும், சமயப்பணிக்கும் தடைகள் வாராது, இறைபணியில் என் வாழ்க்கை கழிய வேண்டும்; இறக்கும் பொழுது அன்னை காசி விசாலாட்சி மடியில் என் தலை இருக்கக், காதில் காசிவிசுவநாதர் பஞ்சாட்சர மந்தி ரத்தை ஒத வேண்டும், மரணபயமின்றிச் சிவன் கழலைச் சேரவேண்டும்" .
“ஈசனுக்கு அன்பிலார் அடியவர்க்கும் அன்பிலார்
எவ்வுயிர்க்கும் அன்பிலார், தமக்கும் அன்பிலார்?
- சிவஞானசித்தியார்
ஆலய வழிபாட்டின் நோக்கம் மனதைப் பாச கரணங்களில் தோயவிடாது, பக்தி, அன்பு கரணத்தில் தோயச்செய்து அஹிம்சா பரமோ தர்மா" என்னும் உயரிய அறத்தைப் பெறுவிப்பதாகும்
இன்று பெரியோர்கள் என்று சொன் னால் வயது முதிர்ந்தவர்கள், பெரும் பணக்காரர்கள், பெரும் பதவியிலிருப்ப வர்கள் என்ற அளவோடு அச்சொல்லின் பொருள் முடிந்து விடுகிறது
. “செயற்கு அரிய செய்வார் பெரியர்” என்று தான் பெரி யோர்களுக்கு இலக்கணம் வகுக்கிறான் வள்ளுவன்.
இன்றைய 21ம் நூற்றாண்டில் இதய சுத்தியுடன் “மக்கள் சேவையே மகேசன் சேவை” என்கிற எண்ணத்துடன் என் கடன் பணி செய்து கிடப்பதே என்று வாழ்வது செயற்கு அரிய காரியம் என யான் கருது கிறேன்.

எழுதியவர் : (23-Apr-17, 7:44 pm)
பார்வை : 1950

சிறந்த கட்டுரைகள்

மேலே