பார்வையில் உள்ளம் கொள்ளைபோகும் 555
அன்பே...
உறவுகள் கூடி வரன்கள்
பார்ப்பார்கள் திருமணத்திற்கு...
பத்து நிமிட
பார்வையில்...
இவன் அவளுக்கும் அவள்
இவனுக்குமென பேசுவார்கள்...
இவளுக்கு பிடித்தது எது
அவனுக்கு பிடித்தது எது...
இவளுக்கு பிடிக்காதது எது
அவனுக்கு பிடிக்காதது எது...
உள்ளங்கள் இடமாறுமுன்
பார்வைகளின் இடமாறுதலுக்கு...
திருமணம் முடிகிறது...
சில உறவுகள் புரிந்து
கொள்கிறார்கள்...
சில உறவுகள் புரிந்து கொள்ளாமல்
பிரிந்து செல்கிறார்கள்...
எல்லாம் புரிந்துகொண்ட
அவனும் அவளும்...
காதல் திருமணம் செய்தாலும்
அங்கேயும் விரிசல்கள்...
பத்து நிமிட பார்வையோ
பத்துவருட காதல் உள்ளமோ...
அங்கு விட்டுக்கொடுக்கும்
உள்ளம் இல்லையெனில்...
பிரிவுகள் நிச்சயம்...
விட்டுக்கொடுக்கும் வாழ்க்கை
என்றும் இன்பம்.....