கவிஞர்களும் கன்னியும்---முஹம்மத் ஸர்பான்

அதிகாலை
நீ தூங்கும்
அறையில்
உமர்கய்யாம்
கவிதை நூறு
மெழுகுவர்த்தி

நீ முகமூடி
அணிந்து
செல்லும்
பாதையில்
கவிக்கோவின்
புத்தகங்கள்
இலவசமாக
விற்கப்படுகிறது

வைரமுத்துக்
கவிதையில்
நீ நிலவு
வாலியின்
கவிதையில்
நீ கனவு
நான் எழுதும்
யாவற்றிலும்
நீ கவிதை.....

யுக பாரதி
என்னவள்
வெட்கத்தின்
முந்தானைப்
பக்கங்களை
களவாடி
நித்தம் நூறு
பாடல்கள்
எழுதுகிறான்

கபிலனின்
அறிவியல்
கற்றுத்தந்த
எட்டாம்
கண்டத்தை
உன் விழிகள்
காட்டியது

கார்க்கியின்
தொழில்நுட்ப
அகிலத்தை
முற்றுகையிட்ட
காந்தப் புயல்
நிலா போன்ற
*உன் பற்கள்*

பா விஜய்யின்
எழுத்துக்களில்
சில முறை
நிலமாகவும்
பல முறை
நிலவாகவும்
வாடகையின்றி
வசிக்கின்றாய்

முத்துக் குமார்
விருதுப்
பட்டியலில்
உன் மெளனம்
மற்றுமொரு
தேசிய விருது

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (24-Apr-17, 7:58 pm)
பார்வை : 150

மேலே