பெண்ணே உன் பரிணாம வளர்ச்சி -- முதல் பாகம்

இன்று நாம் வாழ்க்கையில் காணும்
சில காட்சிகள் நாகரீகத்தின்
வீழ்ச்சியா வளர்ச்சியா யாரறிவார்
அன்று மனைவி கணவனுக்கு கண்ணாயிருந்தாள்
அவன் மீது அன்பு பொழிந்தாள் அவனே
கண்கண்ட தெய்வம் என்றும் திடமாயிருந்தாள்
குருவை சீடன் நினைத்திருந்தது போல்
கணவனுக்கு பணிவிடைகள் அத்தனையும்
செய்து மகிழ்ந்தாள் கேணியிலிருந்து
வாரிக்கொண்டு நீர் இறைத்து மணாளன்
உச்சி முதல் உள்ளங்கால்வரை தேய்த்து
ஒரு குழவியை குளிப்பாட்டுவதைப் போல்
குளிப்பாட்டிவிடுவாள் மகிழ்வாள்
வீட்டு வேலை அத்தனையும் செய்வாள்
செய்து முடித்த பின்
பானையில் கூழ் எடுத்து கூடவே
சூடான கீரைக் குழம்பும் கரியமுதும்
ஏந்தி செல்வாள் வயல் நோக்கி -அங்கே
மணாளனுக்கு இன்னமுதாம் இந்த
உணவளித்து அவன் உண்டவுடன்
கலயத்தில் மிகுந்திருந்த உணவை
தானும் உண்டு இனிய முகத்தோடு
இல்லம் திரும்புவாள்
மணாளனே மங்கையின் பாக்கியம்
என்று இருந்தாள் !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (25-Apr-17, 2:00 pm)
பார்வை : 92

மேலே