அன்பின் அவசியம்

" விஷத்தை விஷமே முறிக்கும். ", என்ற கூற்று எவ்வாறு நடைமுறையில் சாத்தியம்??...
விஷம் நிறைந்த பாம்பு தீண்டிய ஒருவரை அதே பாம்பு மீண்டும் தீண்டினால் அவர் பிழைத்துவிடுவார் என்ற கருத்து கொள்ளலாமா?...
உண்மை யாது??...
உண்மையில் தனி விஷம் உயிரையே பறிக்கும் தன்மை உடையதே...
அவ்விஷத்தோடு சில வேதிப்பொருட்கள் சேர்க்கப்படும் போது அது விஷம் முறிக்கும் மருந்தாகிறது...
மனித மனதிலும் இதே நிலை தான்...
விஷம் நிறைந்த எண்ணங்களால் சுழப்பட்ட மனிதனால் விஷமச் செயல்களே விளைகின்றன...
அவை மனித சமூகத்தை சீர்குலைத்து அழிக்க வழி வகுக்குகின்றன...
அந்த விஷம் நிறைந்த மனதில் அன்பென்னும் வேதிப்பொருள் சேர்க்கப்படும் போது, அதிலுள்ள விஷத்தன்மையாவும் மறைந்து ஆரோக்கியமான எண்ணங்களால் நிறைந்து வாழ்விக்கும் மருந்தாகிறது....
உலகையே அழிப்பேன் என்று சூளுரைப்பவனைவிட உலகையே வாழ்விப்பேன் என்று சூளுரைத்து வாழ்பவனே உலகில் தலைசிறந்த பலசாலி...
ஏனெனில், பிறரை வாழ்விக்க நினைப்பவனிடத்தில் அன்பே குடிகொண்டுள்ளது...
அந்த அன்பே அவனது பலமாகிறது...
அன்பாகிய பலத்தை அடைந்து அகிலத்தை வாழ்விக்கப் பாடுபடுவதே நல் ஞானத்தின் ஆதாரமாகி, சூட்சும அறிவுக் கண்ணை திறக்கிறது....