கனவுக்குள் அவன்

கண்மூடி நான் தூங்கினேன்
கனவினில் அவன் வந்தான்
கையோடு கைகோர்த்து
கவிதைகள் பல தந்தான்
என் பக்கம் வந்தான்
உயிர் நீயே என்றான்
ஒரு முத்தம் கேட்டான்
நான் வெட்கம் கொண்டேன்
இதழோடு இதழ் வைத்து
முத்தங்கள் அவன் தந்தான்
முன்பு காணாத
இன்பங்கள் பல தந்தான்
பொன்னான இரவுகள்
நன்றாக கழிந்ததம்மா
கண்ணாளன் வருகையில்
சொர்க்க வாசல் திறந்ததம்மா
ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்