எனக்கு ஆதார் அட்டை எப்பத் தருவாங்க

அம்மா, அம்மா....
😊😊😊😊😊😊
என்னடிச் செல்லம்?
😊😊😊😊😊😊
எனக்கு எப்பம்மா ஆதார் அட்டை தருவாங்க?
😊😊😊😊😊😊
இன்னும் எனக்கே ஆதார் அட்டைத் தரலிடி செல்லம். மனுசங்களுக்கு அஞ்சு வயசு நிறைவானவங்களுக்குத் தான் தர்றாங்க. வட இந்தியாவில மாடுங்களுக்கெல்லாம் ஆதார் அட்டை தர ஆரம்பிச்சுட்டாங்களாம். இனிமேல் தான் மத்த விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் ஊர்வன அனைத்துக்கும் ஆதார் தருவாங்கன்னு நெனக்கிறேன் உனக்கு இப்ப என்ன வயசுடாச் செல்லம்?
😊😊😊😊😊😊
எஞ் செல்ல அம்மா. என்ன பெத்த உங்களுக்கே என்னோட வயசு
தெரியாதா?
😊😊😊😊😊☺☺
தெரியுண்டிச் செல்லம். உன்னோட அறிவைச் சோதனை பண்ணத்தாண்டாச் செல்லம் நான் உன் வயசைக் கேட்டேன்
😊😊😊😊😊😊😊
சரிங்க அம்மா. எனக்கு இப்ப நாலு மாசம்.
😊😊😊😊😊😊😊
சரி, சரி. உனக்கு அஞ்சு மாசம் முடிஞ்சதும் ஆதார் அட்டை பெறும் தகுதி வந்துடும். நம்ம ரண்டு பேருக்கும் ஆதார் விரைவில கெடைக்கும். அதுக்கப்பறம் நாம வேட்டைக்குப் போகும் போது மத்த பூனைங்க நம்மகிட்ட வம்புக்கு வந்தா நம்ம ஆதார் அட்டையக் காட்டி நம்ம முகவரியக் காட்டினா மத்த பூனைங்கெல்லாம் துண்டக் காணோம் துணியக் காணோம்னு தலை தெரிக்க ஓடிடுவாங்க.
😊😊😊😊😊😊
அப்பிடியா அம்மா?
😊😊😊😊😊😊😊
ஆமாண்டிச் செல்லம்.

எழுதியவர் : மலர் (28-Apr-17, 9:49 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 255

மேலே