விரக்தி

"நான் நானாயிருந்து
நாட்கள் பல ஆச்சி ..

புன்னகைத்து
நாட்களாச்சு..,,
மௌனமே
மொழியாகி போச்சு..!

எனக்குள் ஒருவன் ..
என் எண்ணம் மீறியவன்
அவன்..,,,

வாழாதே நீ ..
இறந்திடு என்பதே
அவனது பேச்சு ..!
*************************************
நடை' பிணமாய்...
நகரும் நாட்கள்..

விடை' அறியாய்
சீறும் கேள்விகள்..

மதி' தொலைத்த
விதியாய்.. - மரணம் தேடி
திரிகிறேன்...!
*************************************

எழுதியவர் : தாமு (28-Apr-17, 7:41 pm)
சேர்த்தது : தாமோதரன்
Tanglish : virakthi
பார்வை : 137

மேலே