தினம், தினம்

காலை எழுந்தவுடன்....

கதிரவன் மலர,கண்கள் மலர,
நல்லவை நாளும் நடக்க,
தேவியர் மூவர் நாமம் நன்றே சொல்லி,
கை மலர்ந்து பார்ப்போம்.

குளிக்கும் முன்.......

உடல் குளிர, உள்ளம் குளிர,
தூய்மை காக்கும், புண்ணிய நதிகள் தரும்
நலம் யாவும் பெற,நமசிவாய என்று சொல்லி
நீராடி மகிழ்வோம்.

உணவு உண்பதற்கு முன்......

உணவின் மலர்ச்சி, உடலின் வளர்ச்சி,
உணவின் உன்னதம்,நாளும் பெற்றிட,
உலகம் காக்கும் அண்ணபூரணியை,
நினைவில் வைப்போம்.

இரவு உறங்குவதற்கு முன்.....

நித்திரை சுகம் நித்தம் காண,
உடல் கண்ட அசதி மறைய,
நாளும் பெற்ற நன்மைகள் நிலைக்க,
மாலவன் அடி மனதிற் கொள்வோம்.

எழுதியவர் : arsm1952 (28-Apr-17, 10:25 pm)
சேர்த்தது : arsm1952
பார்வை : 71

மேலே