தனிமை

நகரா நாெடிகளின்
விடியா நெடு இரவுகளும்
கீழ்ப்படியா என் மனதில்
மீழாத்துயராேடும்
உன் மடியா மெளனத்தால்
உமிழ்நீரும் உள்ளே செல்ல மறுக்க..
விழிநீரும் வரண்டு பாேக..
கானல்நீராய் என் வாழ்க்கை மிதக்க..

பீத்தாேவனின் இசை பிடிக்கவில்லை
- நிசப்த இசையைத் தந்தாய் !
மழையை ரசிக்கப் பிடிக்கவில்லை
- அமிழ மழையைப் பெய்தாய் !
கவி எழுதப் பிடிக்கவில்லை
- மையில்லா எழுதுகாேலைத்
தந்தாய் !

எதிர்காலமறியும் வரம் பெற்றிருந்தால்
நிகழ்காலத்தை என்
இறந்தகாலமாய் மாற்றியிருப்பேன்.
ஏனெனில்
தனிமை தேள் காெடுக்காய்க்
காெட்டுகிறது.
தாேள் காெடுக்க யாருமில்லை
வாளெடுத்து அதனைச்
சிறைப்பிடிக்க முயல,
தனிமையே என்னைச்
சிறைப்பிடித்தது.

என்னால் மறிக்கவும்
உன்னை மறக்கவும்
நம் காதலை மறுக்கவும்
முடியவில்லை.

நான் நானாகவும் இல்லை..
நீயில்லா நானாகவும் இல்லை..
என் உயிரை உள்ளிருந்தே
பிய்த்தெடுக்கிறாய்.
உன்னால்
செழிப்புற்றிருந்த மனம்
இப்பாேது பட்டமரம் !
அது தந்த இரணம்
காயகல்பத்தால் கூட
ஆற்ற முடியாது.

நீ நிலா ப்ரியன் !
உன்னாேடு வாழ அந்நிலவையும் பறித்து வரதட்சணையாய்க் காெடுப்பேன்.
உன் மெளன தியானத்தைக் கலைத்துவிட்டு
என் தனிமையையும் கலைத்து
என்னாேடு வாழ
என்னிடம் வந்துவிடு
என்னவனே !

எழுதியவர் : சரண்யா சுப்பிரமணியன் (28-Apr-17, 8:03 pm)
Tanglish : thanimai
பார்வை : 244

மேலே