காதலியும் ரோசாப் பூவும்

ரோசாப்பூ அழகிய பூ
நிறத்தால் வாசத்தால்
மனதை கொள்ளைகொள்ளும் பூ
ரோசாவை பறிக்கும் கைக்கு
மென்மை தேவை
பொறுமை இழந்து
பறிக்க துணிந்தால்
கைகளில் அதன்
முட்கள் தைக்கும்
முரட்டு கைபட்டு
ரோசாவின் இதழ்களும்
சிதறிப் போய்விடலாம்
காதலியும் ரோசாப்பூப் போல்
அழகியவள் மென்மையானவள்
முரட்டுத்தனம் கொண்டு
அத்து மீறினால்
அவள் விலகி தூர போய்விடுவாள்
காதலன் அவள் சீற்றமாம்
முட்கள் தீண்ட வேதனைப்படுவான்
காதலி மனதால் சின்னாபினம் அடைவாள்
இனி அவர்கள் இரு துருவங்கள் தான்
சேருவது எப்போது ....................

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (28-Apr-17, 8:49 pm)
பார்வை : 78

மேலே