இப்படிக்கு உன் உயிரடி

ஏட்டைப் படிக்க மறந்துவிட்டேன்
உன் இதயக் கூட்டைப் படித்ததால்..
என் மனப்பூட்டைத் திறந்த
திறவுகாேல் நீயடி..

நற்பாட்டைத் தந்த கவியும் பின்னடி.
உன் சாட்டைப் பார்வையால் தாேன்றிய கவியே முன்னடி..

என் வீட்டை நிறைத்த உயிராேவியமும் நீயடி..
பனிமூட்டத்தில் நான் ரசித்த
முதற்காவியமும் நீயடி..

பசும்மாட்டினிற் சுரக்கும் பாலினது
குணமும் நீயடி..
செங்காட்டினிற் பூத்த நறுமணமும் நீயடி..

கண்ணாடியில் எனது பிம்பமாய் நீயடி..
வண்ணமடித்த காதலால் சங்கமித்தாேம் நாமடி..

பண்பாட்டிற்கெடுத்துக்காட்டும் நீயடி..
உன் கண்பாட்டிற்கரைந்த காதலனும் நானடி..

என் வாழ்க்கை மணிக்காட்டியில் ஒவ்வாேர் நாெடி முத்தத்திற்காக
யாசித்த யாசகனும் நானடி..

தமிழ்நாட்டின் தங்கக்
காரிகையும் நீயடி..
தெந்நாட்டின்
ஜான்சி ராணியும் நீயடி..
செந்நாட்டின்
செல்வச்செழிப்பும் நீயடி..
செம்மாங்கனியின்
செஞ்சுவையும் நீயடி..
பாசாங்கில்லா
பசுமைப்பாசமும் நீயடி..

உன் கண்ணாளனும் நானடி..
என் இல்லாளும் நீயடி..
எந்நாளும் பாெந்நாளாக
வாழ்வாேம் நாமடி..
இப்படிக்கு.. உன் உயிரடி !

எழுதியவர் : சரண்யா சுப்பிரமணியன் (28-Apr-17, 8:50 pm)
பார்வை : 226

மேலே