அழகான மரணம்
இந்த உலகில் எனக்கென
நிலம் உண்டெனில்,
அது மயானமாக இருக்கட்டும் ..............
நீர் உண்டெனில்,
அது கண்ணீராக இருக்கட்டும் ..............
காற்று உண்டெனில்,
அது மரணக் காற்றாக இருக்கட்டும் ..............
ஆகாயம் உண்டெனில்,
அது நரகமாக இருக்கட்டும் ..............
நெருப்பு உண்டெனில்,
அது சிதைத் தீயாக இருக்கட்டும் ..............
அமைதியான கல்லறையில்
அழகான மரணம் நிரப்பி
அன்பான உன் நினைவுகளில் வாழ்ந்திடுவேன்..............