ஏனென்றால் இது பருவ வயது

வீணாக மயங்காதே
மங்கையே
இது பருவ வயது

தாயுண்டு
தந்தையுண்டு
ஊருண்டு
உறவுண்டு
உன்மேல் நல்லவள்
எனும்
நம்பிக்கையுண்டு
வீணாக மயங்காதே
இது பருவ வயது..

புரட்டிப்பார்
திரட்டிப்பார்
போலியாசைகளின்
பொல்லாப்பை
பொறுமையாய்
படித்துப்பார்
வறுமையை
நினைத்துப்பார்
வீணாக மயங்காதே
இது பருவ வயது

எண்ணங்களை
ஒருமுகப்படுத்து
ஏற்றங்ளை
பண்முகப்படுத்து
இலட்சியத்தில்
அதிகவனம் செலுத்து
வீணாக மயங்காதே
இது பருவ வயது

யாரோடும்
அளவோடு பழகிடு
அர்த்தமற்றதை
அடியோடு வெறுத்திடு
காலத்தோடு
கற்பை காத்திடு
வீணாக மயங்காதே
இது பருவ வயது

நீயே என் உயிரென்பார்
நீயே என் உறவென்பார்
நீயே என் தாயென்பார்
இவ்விடத்தில்
கொஞ்சம்
தள்ளியே இரு
வீணாக மயங்காதே
இது பருவ வயது

உன்னசைவை
உலகம் பார்க்கிறது
இவள் யாரென்று
தனக்குள்ளே
கேட்கிறது
உன்மீது
காமக்கண்கொண்டு
மொய்க்கிறது
வீணாக மயங்காதே
ஏனென்றால்
இது பருவ வயது...

எழுதியவர் : கார்த்திகைசெல்வன் (30-Apr-17, 2:10 pm)
பார்வை : 122

மேலே