பாரதத்தின் அவல நிலை - நாகூர் லத்தீப்

தனியார்
என்ற பெயரிலே
தனி மனித
சுரண்டலுக்கு
துணைபோனது
தரங்கெட்டு
போனது வியாபாரம்...!!!

பாரதம்
தற்போது
பரதம் ஆடுகிறது
தரங்கெட்ட
ஆட்சியாளரின்
வருகையினால்.....!!!

ஏமாற்றும்
மனிதன்
தலைவனாம்
கொள்ளையடிப்பவன்
தியாகியாம்
நியாயம் கேட்பவன்
தீவிரவாதியாம்....!!!

உண்மைக்கு
எதிர்ப்பு
சத்தியத்திற்க்கே
சோதனை
மிகப்பெரிய வேதனை
பாரதத்திலே....!!!

மிருகத்திற்கும்
மனித வர்க்கத்திற்கும்
மதிப்பு அறியா பேடிகள்
மதம் கொண்டு மனிதனை
மிருகத்தனமாக அடிப்பது
பாரதத்தின் சாபக்கேடு....!!!

உரத்த குரல்
நசுக்கப்படுகிறது
உரிமைகள்
பறிக்கப்படுகிறது
குண்டர்கள் கூட்டம்
கூடாரம் இடுகிறது
பாரதத்திற்கு
மத சாயம் பூசிட.....!!!

ஒன்று படுவோம்
உறக்கச் சொல்வோம்
நாம் இந்தியர் என்று....!!!

எழுதியவர் : (30-Apr-17, 2:29 pm)
சேர்த்தது : நாகூர் லெத்தீப்
பார்வை : 60

மேலே