தேடி அலைகிறார்கள்
![](https://eluthu.com/images/loading.gif)
தேடி அலைகிறார்கள் !
கவிதை by : பூ.சுப்ரமணியன்.
தாய்
பிள்ளையின் பாசம்
தேடி அலைகிறாள் !
தந்தை
குடும்பத்துக்கு பணம்
தேடி அலைகிறான் !
மகன்
நிரந்தர வேலை
தேடி அலைகிறான் !
மகள்
மாப்பிள்ளையை
தேடி அலைகிறாள் !
தாத்தா பாட்டி
மன அமைதி
தேடி அலைகிறார்கள் !
அரசியல்வாதி
பணம் பதவி
தேடி அலைகிறான் !
ஆன்மீகவாதி
கடவுளைத்
தேடி அலைகிறான் !
ஏழையோ
தன் உழைப்பைத்
தேடி அலைகிறான் !
உழைப்பாளி
தன் உரிமை
தேடி அலைகிறான் !
காதலன்
தன் காதலியைத்
தேடி அலைகிறான் !
படரும் கொடி
கொம்பை
தேடி அலைகிறது !
பெண்கள்
சமூகப் பாதுகாப்பு
தேடி அலைகிறார்கள் !
கடல் அலைகள்
ஓய்வில்லாமல்
எங்கே எதைத்
தேடி அலைகின்றன ?!