வேண்டுமே சிறகுகள்

விண்ணிருந்து மண் தழுவ
மழைக்கு வேண்டுமோ சிறகுகள்....

மண்ணிருந்து விண்ணோக்கி வளர
செடிக்கு வேண்டுமோ சிறகுகள்....

பூவின் தேன் சுவைக்க
தேனீக்கு வேண்டுமோ சிறகுகள்.....

கல்லை சிலையாக்க
உளிக்கு வேண்டுமோ சிறகுகள்.....

கவிக்கு உயிர் கொடுக்க
கற்பனைக்கு வேண்டுமோ சிறகுகள்......

பூவின் வாசம் பரப்புவதற்கு
காற்றுக்கு வேண்டுமோ சிறகுகள்.....

கரையை தழுவிச் செல்ல
அலைக்கு வேண்டுமோ சிறகுகள்....

இறைவா உன்னை வந்தடைய
ஆத்மாவிற்கு வேண்டுமோ சிறகுகள்.....

அச்சத்தை துச்சமாக்கி
தடைகளை தகர்த்தெரிந்து
சோதனையை சாதனையாக்க
பெண்ணே.......
உனக்கு வேண்டுமே சிறகுகள்.......

எழுதியவர் : நித்யஸ்ரீ (30-Apr-17, 12:35 pm)
Tanglish : vendume siragukal
பார்வை : 124

மேலே