இன்னும் ஞாபகம் இருக்கா

"இனிய தொழிலாளர் தின வாழ்த்துகள். ", என்றவரிடம், " இன்னும் ஞாபகம் இருக்கா? நாய்க்கு எலும்புத்துண்டு போடுகிற மாதிரி ஒவ்வொரு வருடமும் இதுக்கொன்றும் குறைச்சல் இல்லை. ", என்றவாறு வந்தார் அந்த தொழிலாளி உண்மையின் வடிவாய்...

" உங்களை மறக்க முடியுமா? ", என்று பனிக்கட்டி மலையை வாயாலே தூக்கி எரிந்து கொண்டிருக்கும் தொழிலாளியின் மனதைக் குளிவிக்க வைக்கும் விதமாகப் பேசினார் சுயநலமே உருவான அந்த ஆடம்பரப் பேர்வழி...

" வார்த்தையிலே குளுகளு...
செயலோ தள்ளுமுள்ளு...
உங்க வார்த்தைகளால் மகுடிக்கு அடங்கும் பாம்பாய் எங்களை அடக்கியே உங்களுடைய காலமும் நகர்கிறது...
வீடுகட்டுதல் முதல் ஆடை நெய்தல் வரை எல்லாவற்றிலும் எங்கள் உழைப்பு உங்களுக்கு வேண்டும்.. ஆனால் ஒரு நாள் உழைப்புக்காவது தகுந்த கூலி கொடுத்து இருக்கிறார்களா?.
எங்கள் உழைப்பிலே சொகுசாய் வாழ்ந்து கொண்டு, வாயில் மட்டும் நீங்கள் இல்லாமல் நாங்களில்லை என்று வசனம் வேறு... செயலிலோ பணத்திமிரே தலைவிரித்தாடுகிறது...
போதுங்கடா சாமி...
உங்களுடைய போலி வாழ்த்துகளும் புளுகு மூட்டைகளும்.. ", என்று வெடுக்கென கேட்டவராய் வேகமாக நடந்தார் அந்த தொழிலாளர்....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (1-May-17, 9:49 am)
பார்வை : 577

மேலே