என் தனிமையின் மௌனம் எவ்வளவு அழகானது

என்
தனிமையின் மௌனம்
எவ்வளவு அழகானது
உள்ளிருக்கும் உன்னோடும்
உன் நினைவோடும்
நான் பேசிக்கொண்டிருப்பது !

என்
தனிமையின் மௌனம்
எவ்வளவு அழகானது
உன்னைப்பற்றியே சிந்தித்து உனக்கான
கவிதைகளை உதிர்த்து விடுகிறது !

என்
தனிமையின் மௌனம்
எவ்வளவு அழகானது
நீ என்னோடு கழித்த
பொழுதுகளை இதயத்தில்
புன்னகைத்து இனிதாய்
நகர்த்துவது

என் தனிமையின் மௌனம் எவ்வளவு
அழகானது !

எழுதியவர் : வீர . முத்துப்பாண்டி (1-May-17, 5:41 pm)
பார்வை : 404

மேலே