உழைப்பாளி இல்லையென்றால்

ஏமாற்றி வாழ்வதிங்கு யாரு?
முதலாளியா?
தொழிலாளியா?
பகுத்தறிவு இருந்தால்
பகுத்தாய்ந்து பாரய்யா...
உழைப்பாளி இல்லையென்றால்....
உன் வாழ்க்கை உயராதைய்யா...
இனி மே'லாவது...
உழைப்பிற்கு தகுந்த
ஊதியம் கொடுமைய்யா...
இல்லையென்றால் உனக்கு
தொழிலாளி எதிரிதானய்யா...
முதலாளிக்கும் தொழிலாளிக்கு
முரண்பாடு எதற்கைய்யா?
அவன் இல்லையென்றால்...
உன்னால் செய்ய முடியுமா
அந்த வேலையை...?
அவனை அடிமையாக்க நினைக்காதே...
முதலாளியே...அவன் இல்லையென்றால்...
நீ வெறும் உயிரே....! உயிரே...உயிரே...!

எழுதியவர் : கிச்சாபாரதி (1-May-17, 10:21 pm)
பார்வை : 141

மேலே