வருந்திப்போ!
அவளைக் கண்டதும்....ஆனந்தித்த கண்களே....
கண்டதற்காக.......கண்ணீர்விடு!
அவளின் குரல் கேட்டு.....ஆனந்தித்த செவியே....
அவள் சொன்ன சொல் கேட்டு.....முடமாகிப்போ!
அவள் பெயரை,உச்சரித்தபோது....ஆனந்தித்த உதடுகளே...
உச்சரித்ததற்காக........வெட்கப்படு!
அவை, உள்வைத்திருந்து......ஆனந்தித்த இதயமே....
வைத்திருந்ததற்காக......வருத்தப்படு!
அவள், உனதென்றே..... ஆனந்தித்த மனமே,
உந்து,உணர்வை......மரித்துவிடு!
அவளுக்கேன்றே ........ஆனந்தித்த உயிரே,
அதற்க்கேன, வருந்தி......எனைவிட்டுப்போ!