சுயத்தின் சுவை

சுயத்தின் சுவையரியா சிலர்
சக மனிதர்களின் நகல் ஆகின்றனர்...
சுயத்தின் சுவையரியா சிலர்
சக மாந்தர்களின் பிம்பமிக்கும் கண்ணாடி ஆகின்றனர்...
சுயத்தின் சுவையரியா சிலர்
சக மானிடர்களின் வேடம் ஆற்றும் நடிகர் ஆகின்றனர்...
சுயத்தின் சுவையரியா சிலர்
இறுதியில் போலி எனவே ஆகின்றனர்...
கர்த்தா:- தமிழ் தாசன்