வாய்ப்புக் கற்கள்

இறுதித் தேர்வில் தேர்ச்சிபெறுவோமா என
எரிங்கஞ் செடியின் பூவை உடைத்து பார்க்கும் சிறுவனை போல்....


எவரோ ஒருவரின் தாகம் தணித்து சாலையோரத்தில் வீசப்பட்டு கிடக்கும் குளிர்பான டப்பாவை கற்களால் எறிந்து பார்க்கிறேன்.....

கல் பட்டுவிட்டால் நாளை செல்லும் நேர்முகத் தேர்வில் வேலைகிடைத்து விடும் .....

கல் படவில்லை என்றால் வேலை கிடைக்காது மற்றோரு நேர்முகத்தேர்வு வரும்வரை காத்திருக்க வேண்டும்.....

இது முட்டாள் தனமான நம்பிக்கை என நினைக்கலாம் சிலர்......

இந்த விளையாட்டில் சிறு உண்மையான அர்த்தம் இருக்கிறது....

எறிந்த கல் எவ்வளவு துல்லியமாக இலக்கை தாக்குகிறது என்பதில் ஒளிந்திருக்கிறது என் தன்னம்பிக்கையின் அளவு......

இந்த ஒருவருடத்தில் மனஉறுதியால்
குறி வைத்து எறிந்த எத்தனையோ கற்கள் இலக்கை சரியாக அடைந்துவிட்டன.....

வாழ்வின் இலக்கிற்கான வாய்ப்புக்
கற்கள் ஏனோ கிடைக்கப் பெறவில்லை வாழ்வில் இன்னும்.......

-பா.அழகுதுரை

எழுதியவர் : பா.அழகுதுரை (5-May-17, 11:18 am)
Tanglish : vaayppuk karkal
பார்வை : 70

மேலே