இரும்பிலே ஓர் இருதயம்
இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ
முதல்முறை காதல் அழைக்குதோ
பூஜ்ஜியம் ஒன்றோடு
பூவாசம் இன்றோடு
மின்மீன்கள் விண்னோடு
மின்னல்கள் கண்னோடு
கூகுள்கள் காணாத
தேடல்கள் என்னோடு
காலங்கள் காணா காதல்
பெண் பூவே உன்னோடு
என்னுள்ளே எண்ணெல்லாம்
நீதானே நீதானே
உன் நீலக் கண்ணோரம்
மின்சாரம் பறிப்பேன்
என் நீலப் பல்லாலே
உன்னோடு சிரிப்பேன்
என் எஞ்சின் நெஞ்சோடு
உன் நெஞ்சை அணைப்பேன்
நீ தூங்கும் நேரத்தில்
நான் என்னை அணைப்பேன்
என்னாளும் எப்போதும்
உன் கையில் பொம்மையாவேன்
தொட்டு பேசும் போதும்
ஷாக்கடிக்க கூடும்
காதல் செய்யும் நேரம்
மோட்டார் வேகம் கூடும்
இரவில் நடுவில் ஃபேட்டரி தான் தீரும்
மெமரியில் குமரியை
தனிச் சிறை பிடித்தேன்
shutdown-ஏ செய்யாமல்
இரவினில் துடித்தேன்
சென்சார் எல்லாம் தேயத்தேய
நாளும் உன்னை படித்தேன்
உன்னாலே தானே என் விதிகளை மறந்தேன் ...
--------------------------------------------------
இயந்திரத்தின்
கண்கொண்டு
எந்திரனின் இதயம்
ஆராய்ந்த கவிதை ...
நவீன உலகத்தின்
நண்பன் எந்திரன் ... - அவனை
நற்றமிழிலே புனைய முயற்சித்தது
ஆறாம் அறிவையும்
தாண்டிய தமிழ் கற்பனை ...
எந்திர வார்த்தைகளை
தமிழ் மொழியாக்க
முடிந்தளவு
முயற்சி செய்தது
தமிழ் தாயின் மடுவில்
தமிழ் அமுது
சுவைத்த சுகம் ஈட்டியது ...