என் கனவே
அன்பே
கலைவாய் என்று
அறிந்துதான் அதிகாலையில்
தோன்றுகிறாயா?! கனவாக
இல்லை மாறப்போகிறாயா?!
நீ நினைவாக!!,
உன் விழியில் விழுந்த நாள்முதல்
என் இமைகள் உறங்கியது
சில காலம் தானோ?!
அதிலும் வந்து தடுக்கின்றது
உன் நினைவுகள் ஏனோ!!,
தினந்தோறும் தோன்றுகிறாய்
கனவாக உறக்கத்தில்
அதிலும் சில நேரம் தொட்டுப்போகிறாய்
என் இதயத்தை இரக்கத்தில்,
இமை மூடும் இரவிலும்
என்னை தொட்டு போகுதடி
உயிரே உன் வாசம்!
அது தொட்ட நொடிமுதல்
தடுமாறுதடி என் சுவாசம்...!!