சொல்லும் பொருளும் 7 - உரை, உறை

சொல்லில் ஒரு எழுத்து மாறினாலும் பொருள் மாறுபடும்; ஒரு சொல்லுக்கே பல பொருள் உண்டு. எனவே உதாரணத்திற்கு உரை, உறை என்ற இரண்டு சொற்களை இங்கு பார்ப்போம்.

உரைதல்

1. To be reduced into a powder or paste; to wear away by attrition; to be indented or effaced by rubbing; தேய்தல்.
2. To prove abortive; வீணாதல். காரியமெல்லா முரைந்து போயிற்று.

உரைத்தல்
உரை

1. To rub into a paste, wear away by rubbing, grate; தேய்த்தல். வெண்ணெயுரை விரித்த கதுப்போடே (கலித். 115)
2. To test on the touch-stone, as valuable metals like gold; மாற்றறியத் தேய்த்தல். (திவ். பெரியாழ். 5, 4, 5)
3. To smear, daub; பூசுதல். உரைக்கு நானமும் (சீவக. 831)
4. To polish; மெருகிடுதல். ஓடவைத் துரைத்த (ஈடு, 3,1,2)

உரைத்தல்

Rubbing, friction, attrition; தேய்வு. (சூடா)

உரைத்தல்

1. Fineness of gold or silver as tested on the touchstone; மாற்று, உரைகுறைபடாது (அழகர்கல. 55)
2. Gold; பொன். (திவா)

உரைத்தல்
1. To tell, say, speak; சொல்லுதல்
2. To sound; ஒலித்தல். (திவா)

உரைத்தல்

1. Speaking, utterance; உரைக்கை. உரைமேற்கொண்டு (திவ். இயற். 1,25)

2. Word, expression, saying; சொல்.

3. Explanation, interpretation, commentary, exposition, gloss; வியாக்கியானம்.

பொழிப்பகல நுட்பநூ லெச்சமிந் நான்கின்
கொழித்தகலங் காட்டாதார் சொற்கள் - பழிப்பில்
நிரையாமா சேர்க்கும் நெடுங்குன்ற நாட!
உரையாமோ நூலிற்கு நன்கு? 319 அவையறிதல், நாலடியார்

4. Sound of a letter; எழுத்தொலி

5. Fame, reputation; புகழ் உரைசால் பத்தினிக்கு (சிலப். பதி. 56)

6. Sacred writings, holy writ; ஆகமப் பிரமாணம் (சி. சி. அளவை 1)

7. Roar, loud noise; முழக்கம். குன்றங் குமுறியவுரை (பரிபா. 8, 35)

8. Mantra recited aloud; பிறருக்குக் கேட்கும்படி செபிக்கும் வாசக செபம். (சைவச. பொது. 151)

உறை: உறு.

1. Greatness; excellence; பெருமை. (பிங்)
2. Height; உயரம். (பிங்)
3. Length; நீளம் (திவா)
4. Wealth; பொருள் (பிங்)
5. Bell metal; வெண்கலம் (பிங்)
6. Units used as symbols for hundreds or thousands;
பேரளவுக்குச் சங்கேதமாகவிடுஞ் சிற்றளவுக் குறி. உறைவிடவும்போதார் (கம்பரா. உருக்காட். 117).

7. That which is exceedingly low, as price;
மிகக்குறைவானது. உறைவிற்குலா நுதலாள் விலை (திருக்கோ. 266).

8. A measure of grain = 60 மரக்கால்; ஓரளவு.

9. Affliction, distress; துன்பம். (பிங்.)

உறைதல்

1. To reside, dwell; வசித்தல். உம்ப ருறைவார் பதி (நாலடி, 137).
2. To live, conduct oneself; ஒழுகுதல். உலத்தோடவ்வ துறைவ தறிவு (குறள், 426)

3. To thicken, curdle; to coagulate, congeal, freeze; இறுகுதல். குடப்பா லுறையா (சிலப். ஆய்ச்சி. 1, உறைப்பாட்டு மடை)

4. To be close, dense, as trees in a forest; செறிதல்

உறைத்தல்

1. To drop, as the rain; to form, as the dew; துளித்தல். தெண்பனி யுறைக்குங்கால் (கலித். 15)
2. To fall down, as pollen from flowers; உதிர்தல். தாதுறைக்கும் பொன்னறை (கலித். 39, 32)
3. To be pungent, biting, sharp; சுவையுறைத்தல். உப்புறைத்தன மேக முகுத்தநீர் (கம்பரா. சேதுபந். 60)
4. To scorch, as the sun. இன்றைக்கு வெயிலுறைக்கிறது.
5. to produce effects, as words of advice; to sting, as a rebuke or sarcasm;
தாக்கிப்பயன் விளைத்தல். ஆற்றவுமஃதுனக்குறைக்குங் கண்டாய் (திவ். நாய்ச். 1, 9)
6. To prick, as a thorn; முள் முதலியன உறுத்துதல். பாத மெல்லிய வுறைக்கும் (கம்பரா. கோல. 24)
7. To become firm, steadfast, decided, as the mind; ஊன்றுதல். புந்திநின் றுறைக்க (கைவல். சந். 5)
8. To beat upon, as wind; மோதுதல். ஆடை வளியுறைப்பப் போகார் (ஆசாரக். 37)

9. To increase, grow; 1. To rebuke authoritatively; 2. To disgrace; 3. To press down; 4. To resemble;
மிகுதல். யானையிருஞ்செனமுறைக்கும் (ஐங்குறு. 352).tr. அதட்டுதல். (பிங்.) அவமானித்தல்.உருப்பனை யோட்டிக்கொண்டிட் டுறைத்திட்ட வுறைப்பன் மலை (திவ். பெரியாழ். 4, 3, 1).அமுக்குதல். முதுகுறைப்பப் பொறையாற்றும் (குமர. பிர. மதுரைக். 17). ஒத்தல். இலங்கு முத்துறைக்குமெயிறு (ஐங்குறு. 185)

உறை
1. Place of residence, town, appropriate or customary place for a person or thing;
இருப்பிடம். உறையிலேயிருக்கிறார்.
2. Lifetime; வாணாள். வேந்தனுறைகடுகி யொல்லைக் கெடும் (குறள், 564)

இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும். 564 வெருவந்த செய்யாமை

3. Sheath, scabbard, case; ஆயுதங்கூடு. உறைகழித்திலங்குவள் (சீவக. 656)
4. Cover, e.g., pillow-case; தூசிமுதலியன படாதவாறு மூடுகின்ற ஆடையுறை. செந்துகி லுறையின் மூடி (சூளா. கல்யா. 180)
5. Receptacle for grain, a kind of sack; பண்டம் பெய்யும் கூடு.
6. Burnt clay curb, used for the construction of a well; கிணற்று உறை
7. Upper garment, cloak, shawl; போர்வை.
8. Offering; காணிக்கைப் பொருள். நாணாளுறையு நறுஞ்சாந்துங் கோதையும் (பரிபா. 16, 52)
9. The poison bag of the snake; பாம்பின் விஷப்பை.

உறை

1. Leaking; ஒழுகல். (திவா)
2. Drop of water or other liquid; நீர் முதலியவற்றின் துளி. (திவா)
3. Rain; மழை.

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம்பெயல். 559 கொடுங்கோன்மை.

4. Rainy season; மழைக்காலம். நாளாலுறையெதிர்ந்து (திணைமாலை 1)
5. Reserve of curds for curdling milk; உறைமோர். உறையமைதீந்தயிர் (பெரும்பாண். 158)
6. Pungency, corrosiveness; காரம். (திவா)
7. Washer-man's lye;
ஆடையழுக்கற்றும் உவர்நீர் (திவா)
8. Medicine, medicament;
மருந்து. கயற்கண் செய்த வுறைமலி யுய்யாநோய் (சிலப். 7, 8)
9. Food; உணவு. (பிங்.) உறைவள ரூனிலாய வுயிர் (தேவா. 212, 6)

உறை
1. Circular frame-work of wood over which a well is built; கிணற்றினடியில் வைக்கும் மரவளையம்.
2. Gold; பொன்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-May-17, 12:11 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 530

சிறந்த கட்டுரைகள்

மேலே