நான் ஏன் கேட்க வேண்டும்

சரி.......!
இது ஏன் ...,?
எதற்க்காக இது.....?
இது இப்படித்தானா.......?
ஒரு வேளை இது இப்படி இருந்திருந்தால்......?
இதை நான் செய்ய வேண்டுமா .........?

மேற்சொன்ன கேள்விகளை மீண்டும் ஒரு முறை
அசை போட்டு பார்ப்போமே !
நம்மில் யாரும் இந்த கேள்விகளில் ஒன்றைக்கூட
அறிந்திடாமல் இருந்திருக்க முடியாது!
யாருக்கு தெரியும்
கேள்விகளின் பட்டியல் இதை விட நீண்டு இருக்கலாம்.......,

இருந்தும் நம்மை வேறுபடுத்துவது
என்னவென்றால் நாம் இந்த கேள்விகளை முன்னேடுக்கும் இடங்களும்
அந்த கேள்விகளுக்கான பதில்களை நோக்கிய தேடல்களும்.....,
அந்த தேடல்களில் எந்த அளவு பதில்களை அடைந்து கொண்டோம்
என்பதில் தான்..,

நம்மில் சிலர் கேள்விகளோடு நின்று விடுகிறோம்....,
சிலர் கேள்விகள் கேட்பதற்கு கூட விளைவதில்லை....,
சிலரின் பதில்களுக்கான தேடல்கள் ஏதோ ஒரு இடத்தில் இனம் புரியாத குழப்பங்களால்
சிதறடிக்கப் படுகின்றன .....,
சிலர் அந்த தேடலில் வெற்றி காண்கின்றனர் .......,
ஆனால்
அதிலும்
வெகு சிலரால் மட்டுமே
அந்த தேடலின் வெற்றிக்கு பின்னாலும்
புதிய கேள்விகளை நோக்கி பயணிக்க முடிகிறது.......,
இதில் நாம் எந்த படித்தரத்தில்
இருக்கிறோம் என்பதை
யோசிக்க வேண்டும்.......?

மனிதனாய் பிறந்த யாவரும்
கேள்விகள் கேட்க
எத்தனிக்கவேண்டும் .
யார் கேள்விகள் கேட்க மறுப்பர்களோ
அவர்களின் உரிமைகளும்
மறுக்கப்படும் ........,
அவர்களின்
முதுகுஎலும்புகள்
முறிக்கப்படும்..........,

நீ
உன்
இருத்தலை
இவ்வுலகில்
உணர வேண்டுமா?

கேள்வி கேள் .....,
உன் கேள்விகளுக்கு
இந்த உலகில்
பதில்கள் இல்லாமல் இல்லை......,

எழுதியவர் : ஹாதிம் (6-May-17, 7:28 pm)
சேர்த்தது : இப்ராஹிம்
பார்வை : 247

சிறந்த கட்டுரைகள்

மேலே