இரவும் நானும்

விழிகள் விழித்து கிடக்கும்
இந்த இரவின் மிச்சம்
சிதையூட்டப்பட்ட பிணத்தின்
கடைசி நிலையை
என்னில் உணர்த்துகிறது

நீண்ட நெடிய பயணம் பின்
களைப்புற்ற யாக்கை
புத்தனை போல் அமைதி
வேண்டியே கிடக்கிறது

மனம் மட்டும் கட்டுக்கடாங்காமல்
யானை போல் மதம் பிடித்து திரிகிறது
ஒளி மிளிர போகும் பகலுக்கும்
இருள் மங்கும் இரவுக்குமிடையே

இனி அனலி ஆளப்போகும்
என் பகலில் தொடரலாம்
இந்நிகழ்வு மறு இரவுக்கான

#ஒத்திகையாக....

#பாரதி...✍

எழுதியவர் : பாரதி செல்வராஜ் .செ (6-May-17, 3:05 pm)
சேர்த்தது : பாரதி நீரு
Tanglish : iravum naanum
பார்வை : 6741

மேலே