தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்
தகப்பனை ஓரங்கட்டி தவிக்குது
நடுத்தர குடும்பங்கள்.
தாயின் செல்லம் கொடுக்கும் முழுச்சுதந்திரம்,
பிள்ளைகள் கிள்ளைகளாய்.தாவித்தாவிக்குதிக்கின்றன.!
ஸ்மார்ட்போன், பொம்மை லேப்டாப், ஆடை அணிகலன் வாங்கித்தர ஒருவன்
அவனிடம் வாய் கொடுத்து பேசாது
பாரம்பரியம் கலாச்சாரம் என்றாலே
கேலி கிண்டல் செய்து
தலைமுறை இங்கே
தடம் மாறி
தடயம் இழந்து
சுயம் இழந்து
சுற்றம் வரலாறு மறந்து...
எங்கே போகிறோம், இந்த பிள்ளைகளை நம்பி?