வாழ்க்கை அத்தியாயம்
எனது துன்பமே பெரிதென எண்ணி, எனது மன உணர்வுகளை அறிய யார் உள்ளாரென்று நினைத்து தனித்து நின்ற போது உணர்ந்தேன் என்னை விட அளவில்லா துன்பக்கடல் அழ்ந்துக் கொண்ட கரையேறத் துடிக்கும் மக்களின் மன உணர்வுகளை...
அன்னை பூமியாம் தமிழ்நாடு...
தனது அன்னையை பிச்சை எடுக்க விடுவாராம் தெருவோடு...
உள்ளம் சுருங்கி விட்டதாம் தன் மனைவி, மக்களோடு...
இதைவிடவும் சுருங்கிவிடுகிறதாம் சிலருக்கு தன்னோடு...
என்று தான் வாழ்வதாம் அன்போடு?...
என்ற ஏக்கதோடு
நாளும் வாழ்கிறோம் துன்பத்தோடு...
கை ஏந்தியவரிடம் இல்லையென்று கூற மனம் வராது பையில் இருப்பதைப் பங்கிட்டே இயலாதோர் நலம் பேண இன்முகத்தோடு அளித்து ஆதரவில்லாதோருக்கு ஆதரவளித்துக் கண்ணீர் துடைத்து
வாழ்ந்து, தன்னையே பலரும் பின்பற்ற ஒரு முன்னுதாரணமாய் அமைய வேண்டும் என்றே சித்தம் சிந்திக்க அதற்காக உழைக்கும் வழியில் நேர்மை தவறாது பொய்மை கலவாது புறப்பட்டுவிட்டேன் காலமென்னும் முடிவில்லா குறிப்பேட்டில் நல்லதொரு வாழ்க்கை அத்தியாயம் எழுத....