உயர்ந்தது ஒன்றாம் வகுப்பே
"உயர்ந்தது ஒன்றாம் வகுப்பே"
இடது கையை தலைக்குமேல் சுற்றி வலது காது தொட்டு விண்ணபத்தின்
ஒன்றாம் வகுப்பில் சேரும் தகுதி பெற்றேனேன்று.....
பள்ளிசெல்லமாட்டேன் என்று அடம்பிடிகவோ அழவோ தெரியவில்லை .....
சின்னப் பள்ளிக்கூடத்திலிருந்து
பெரியபள்ளிக்கூடம் செல்கிறேன் என்று பெருமையுடன் கூறிச் சென்றேன் பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்து......
கூடைப் பை மற்றும் நரம்புப் பை வாங்க வழியில்லை
மஞ்சப்பையின் காதை திருகி தோளில் போட்டுக் கொண்டு சென்றேன்......
அந்த பைக்குள் கேமஸ் டப்பா என்னும் பொக்கிஷம் வைத்திருப்பேன்.....
அந்த டப்பாவினுள் தீப்பெட்டியின் தீக்குச்சிகளை போல் சிலேட்டு குச்சிகள் அடுக்கி வைக்க பட்டிருக்கும்....
புத்தகம் கிழிந்துவிட்டால் ஒட்ட பசை வேண்டுமே என்று வேலிக் கருவமர பிசினை சூட டப்பாவில் சிறைபிடித்து சேகரித்த
காக்கி டவுசர் ராஜாக்களின்(எங்கள்) காலம் அது.....
பெயர்கூட எழுத தெரியாத என்னை என் ஆசிரியை கைபிடித்து
எழுத கற்றுக்கொடுத்த முதல் எழுத்து தமிழ்மொழியின் முதல் எழுத்து "அ"கரம் ஆகும்..
கிணற்றில் தெரிந்த நிலவின் பிம்பத்தை கண்ட குரங்கு
நிலவு கிணற்றில்
விழுந்து விட்டதே
என்று எண்ணி
தன் கூட்டத்தை அழைத்து நிலவை காப்பாற்ற கிணற்றுக்குள் சென்ற கதை இன்னும் நினைவிருக்கு.....
சிட்டே சிட்டே பறந்து வா... .
பொம்மை பொம்மை பொம்மைப் பார்...
One little two little three little chicken....
இந்த பாடல்களெல்லாம் தெருக்களிலும்,தூக்கத்திலும் சத்தம்போட்டு பாடி திரிந்த பாடல்கள் ஆகும்.....
தாகத்தினால் தண்ணீர் குடிக்க வாளியின் மூலம் சென்று கிணற்றுக்குள் சிக்கிக்கொண்ட நரி
கிணற்றுக்குள் சொர்க்கம் இருப்பதாய் கூறி ஓநாயை கிணற்றில் சிக்க வைத்து
நரி தப்பித்து கொண்டது.....
இக்கதையில் வாழ்க்கைக்கு தேவையான கருத்து ஒன்று உண்டு...
"ஓநாய் ஆசையினால்
அழிவை சந்தித்தது"...
அடித்து படிக்க வைக்கும் பழக்கம் இல்லை இந்த ஒன்றாம் வகுப்பில்....
சிறுதவறு செய்தாலும்
மன்னிப்பு கடிதம் எழுதி வா என்று யாரும் கூறுவிவில்லை எங்களை....
மனப்பாடம் செய்து மதிப்பெண் வாங்குவது தான் அறிவு
என்ற தவறான பாடம் கற்பிக்கபடவில்லை இந்த வகுப்பில்.....
அவன் நன்றாக படிப்பவன்
இவன் படிக்காதவன் என்ற பாகுபாடு பார்க்கப்படவில்லை இந்த வகுப்பில்....
பட்டப்படிப்பின் இறுதி ஏட்டிற்கு சென்றாலும் சத்தமிட்டு கூறுவேன்
என் வாழ்வின் ஒன்றாம் வகுப்பு தான் உயர்ந்தது என்று........
-பா.அழகு துரை